Wednesday 27 July 2016

வெண்ணிற ஆடை - சரவணன் சந்திரன்

# வெண்ணிற ஆடை (வாழ்வியல் கதைகள்)
# சரவணன் சந்திரன்
# ரூ.110/-

இந்தச் சமூகத்தின் சாம்பல் நிறப் பக்கங்கள் நாங்கள். இந்தச் சமூகம் மறக்க நினைக்கிற மனிதர்கள் நாங்கள். இந்தச் சமூகத்தை அச்சமூட்டுபவர்கள் நாங்கள். சாம்பல் மனிதர்கள் நாங்கள். சாம்பலாகிப் போன கதைகளின் மனசாட்சி. இந்தச் சமூகம் எங்களை விரும்பாவிட்டாலும் நாங்கள் இந்தச் சமூகத்தை விரும்புகிறோம். இதயத்தில் அறையும் இந்தக் கதைகளுக்காகவாவது இந்தச் சமூகத்தை விரும்புகிறோம்

ஐந்து முரலைகளின் கதை - சரவணன் சந்திரன்

# ஐந்து முதலைகளின் கதை (நாவல்)
# சரவணன் சந்திரன்
# ரூ.150/-


தொழில் தேடி திரவியம் தேடி நட்பைத் தேடி தைமூர் சென்றுதோல்வியுடன் திரும்பிய இளைஞனின் கதைதான் ஐந்துமுதலைகளின் கதை. நமக்குத் தெரியாத தைமூரின் தட்பவெப்பநிலையில் தொடங்கி, நாய்க்கறி, காதல், காமம், அட்டை,வெள்ளரிக்காய் என ஒரு டாக்குமெண்டரியைப் போல அத்தனைவிவரங்கள். கதையின் போக்கில் சொல்லிச் செல்கிறார் சரவணன்.
வாசிப்பதற்கு எளிமையாக இயல்பான மொழியில் நாவல் பரபரவெனபோகிறது. புதிய பிரதேசம், அறிமுகம் இல்லாத கடல் அட்டைத்தொழில், அன்பும் பகையும் நிறைந்த நட்பு வட்டம், சூழ்ச்சி எனநாவலின் கதைப்போக்கில் சரவணன் விளையாடுகிறார்.
தொழில் என்பது வெற்றி மட்டுமல்ல என்பது புரிகிறது.முயற்சிகளுக்குத் தோல்வி இல்லை. பத்திரிகையாளராக இருக்கும்அனுபவம் சரவண னுக்கு நிறையவே கைகொடுத்திருக்கிறது.

ஒரு நாவல் என்பது பெருநிலப்பரப்பாக பரந்து விரிந்த மானுடவாழ்வின் முழுமையாக, பல எல்லைகளை தொடவேண்டும்என்பார்கள். அப்படி தொட்டுப் பார்க்கும் முதல் முயற்சியில்வென்றிருக்கிறார் சரவணன்.

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்

# ரோலக்ஸ் வாட்ச் (நாவல்)
# சரவணன் சந்திரன்ல்
# ரூ.150/-

நாவலில் மிக முக்கியம் - அதன் வேகம் - ஒரு நாவல் எல்லா தளங்களையும், எல்லா வாசகனையும் எப்போதும் திருப்திப் படுத்த வேண்டியதில்லை. ஆனால், இந்நாவல் நிறைய விசயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிச் செல்கிறது. நினைத்த மாத்திரத்தில் ஸ்விட்சைத் தட்டினதும் பொறிகள் இயங்க, கம்பி வடங்களில் உயரெழுந்து, வளைந்தும், நிமிர்ந்தும், கீழிறங்கியும் நம்மை மிரட்டுகிற “ரோலர் கோஸ்டர்” அனுபவத்தை “ரோலக்ஸ் வாட்ச்” நாவலை வாசிக்கும் போது பெறமுடியும்.

Tuesday 26 July 2016

எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் - மருதன் (சிறுவர் நூல்)

# எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் (சிறுவர் நூல்)

# மருதன்

# விலை ரூ.45/-


சாக்ரடீஸ், அலெக்ஸாண்டர், ஜோன் ஆஃப் ஆர்க், நெல்சன் மண்டேலா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், கிரேஸி ஹார்ஸ் போன்ற பெரிய பெரிய மனிதர்களைக் கண்டுகூட கதைக்குப் பயமில்லை. ஐயோ, அவர்களையெல்லாம் தொந்தரவு செய்யாதே என்று தடுக்கத் தடுக்க கேட்காமல் பாய்ந்து சென்று அனைவருடனும் ஒன்றுகலந்துவிட்டது கதை. எல்லோரும் நிஜமாகவே பெரிய மனிதர்கள் என்பதால் யாருமே கதையை ஆட்சேபிக்கவில்லை. அனைத்தையும் மறந்து கதையோடு ஒன்றுகலந்துவிட்டார்கள்…

மாயக்கண்ணாடி - உதயசங்கர் (சிறுவர் கதைகள்)

# மாயக்கண்ணாடி (சிறுவர் கதைகள்)
# உதயசங்கர்

# விலை ரூ.70/-


மாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழந்தைகளுக்குச் சொல்ல முயற்சிக்கிற கதைகள். அதன் மூலம் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை ஏறபடுத்த யத்தனிக்கும் கதைகள். அந்த விழிப்புணர்வ அன்பெனும் பெருநதியில் குழ்தைகள் எப்போதும் மூழ்கித் திளைக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதைகள்

Monday 25 July 2016

பார்த்தீனியம் - தமிழ்நதி

# பார்த்தீனியம் (நாவல்)

# தமிழ்நதி

# விலை ரூ.490/-


அண்மைக்காலத்து வரலாற்றில் இலங்கையஅல் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.

தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல்கிறது. காதலை, நட்பை, உயிர் கலந்த உறவுகளை, சமூக நேசத்தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.

உலகத்தின் யுத்தகாலக் கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும்.

-    பிரபஞ்சன்  

ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினி

# ஒரு கூர்வாளின் நிழலில் . .
# (புலிகளின் மகளிரணித் தலைவியின் தன் வரலாறு)
# தமிழினி

# விலை ரூ.125/-


தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்துவிட்டதே என்ற துக்கமும் கேவலும். அதே நேரம் உண்மையின் கூர்முனைகள் யாருக்கும் அஞ்சாமல் பல பிம்பம்களைக் கீறுகின்றன. நேர்மையின் சித்திரங்கள் பிரச்சாரத்தின் நெடுஞ்சுவர்களைக் கடந்து மனதத்தை எல்லா திசைகளிலும் அடையாளம் காண்கின்றன. பிரபாகரனை நேரில் சந்திக்கக்கூடிய, அவரை இறுதிவரை சந்தித்து வந்தவர்களுடன் அந்தரங்கமாக உரையாடக்கூடிய உயர் நிலையில் இருந்தவர் தமிழினி. உயர்நிலைப் போராளிகள் அதிகமும் இறுதிப் போரில் கொல்லப்பட்டார்கள். அல்லது சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார்கள். இந்த இரண்டு நெருப்பு வளையங்களிலும் தப்பிப் பிழைத்தவர் தமிழினி. இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்களை உள்ளடக்கியது இந்நூல். தவிர்க்கவே முடியாத நினைவோடைப் பதிவு இது.



இப்படிக்குத் தங்கள் அன்புள்ள - கி.பார்த்திபராஜா

# இப்படிக்குத் தங்கள் அன்புள்ள . . .
# (மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான கடிதங்கள்)

# கி.பார்த்திபராஜா

# விலை ரூ.130/-


பார்த்திபராஜா என்னும் கதாபாத்திரத்தின் ஒரு பரிமாணமான ஆசிரிய முகத்தைத் துலக்கமாகவும் துல்லியமாகவும் காட்டும் ஒரு கதையின் அத்தியாயங்களாகவே இக்கடிதங்களை நான் பார்க்கிறேன்.

வாழ்க்கையின் புதிர் விளையாட்டுத்தான் எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய வகுப்பறையில் தன்னுடைய மாமியார் ஒரு மாணவியாக வந்து எதிரே அமர்ந்திருக்கும் காட்சி எந்தப் பேராசிரியருக்கும் எந்த நாட்டிலும் அமைந்திருக்காது. ஒரு செவ்வியல் நாடகத்தின் காட்சிபோல அது என் மனக்கண்ணில் விரிந்தது. ‘எனது மாமியாராக, மாணவியாக என்று இரு நிலைகளிலும் தாங்கள் பயணித்தீர்கள் என்றாலும் இரண்டையும் இணைக்கும் அடிச்சரடாக இருந்தது… நீங்கள் எனக்குத் –தோழர்- என்பதுதான்’ என்கிற பார்த்திபராஜாவின் பதில் கடிதத்தின் இறுதி வரிகள்தாம் இந்நாடகத்தின் க்ளைமேக்ஸ் ஆகி நிற்கிறது.

-    ச.தமிழ்ச்செல்வன் 

Friday 22 July 2016

நா.முத்துக்குமார் கவிதைகள்

# நா.முத்துக்குமார் கவிதைகள்
# ரூ.225/-

இதுவரை சினிமா பாடலாசிரியராக இரண்டு தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார் நா.முத்துக்குமார். அவர் முதலில் கவிதையில் இருந்துதான் தனது எழுத்து பயணத்தை ஆரம்பித்தார். அவரின் நான்கு கவிதைத் தொகுப்புகளையும் ஒரே புத்தகமாக இப்போது கொண்டுவந்திருக்கிறார்கள்.

சிந்துவெளிப்‬ பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆர்‬.பாலகிருஷ்ணன்

‪#‎ சிந்துவெளிப்‬ பண்பாட்டின் திராவிட அடித்தளம்
‪#‎ ஆர்‬.பாலகிருஷ்ணன்
‪#‎ ரூ‬.150/-
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற நகரங்களின் பெயர்கள் கூட சிந்துவெளியிலும் அதற்கும் அப்பால் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை நிலைத்துள்ளன என்ற செய்தி முற்றிலும் புதியது, எவரும் கேள்விப்படாதது.
சிந்துவெளி நகரங்களின் “மேல் – மேற்கு : கீழ் - கிழக்கு” என்ற இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு. சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு.
நூலாசிரியர் திராவிட மொழியியலையும், சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து ஒரு புதிய கருதுகோளைப் படைத்துள்ளார். அதன் மூலம் சிந்து நகர மக்கள் திராவிட மொழிகளையே பேசியிருக்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை அறிவியல் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மீண்டும் நிறுவியுள்ளார்.
- ஐராவதம் மகாதேவன், சிந்துவெளி ஆய்வாளர்

Wednesday 20 July 2016

தமிழகத்தில் புரதவண்ணார்கள்

#தமிழகத்தில் புரதவண்ணார்கள்
#த.தனஞ்செயன்
#(தமிழரின் குடித்தொழில் மரபு பற்றிய ஆய்வு நூல்)
#ரூ.200/-

பண்டைய இந்தியாவின் புராதன குழுக்களில் ஒன்றான புரதவண்ணார்களைப் பற்றிய ஒரு வரலாற்று ஆய்வாக இருப்பதால் கல்வெட்டு மற்றும் வாய்மொழித் தரவுகளை நடைமுறைத் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அரிய முயற்சியை இந்நூல் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதியப் பிரிவினைகள் தோன்றிய வரலாற்றுப் பின்புலத்தையும் சில குறிப்பிட்ட சாதிகள் மட்டும் எப்படிக் காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும் அரிய சான்றுகளோடு இந்நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது.
தீண்டாமையின் உச்சமாக விளங்கக்கூடிய எத்தனையோ சான்றுகளை இந்த நூலின் களப்பகுதித் தரவுகள் சுட்டுகின்றன.   



சென்னையின் கதை - பார்த்திபன்

‪#‎ சென்னையின்‬ கதை (வரலாறு)
‪#‎ பார்த்திபன் ‎ 

ரூ‬.500/-

மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்று பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னையில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்கள் பலவும் தங்கள் நூற்றாண்டுக் கதைகளைக் காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
இந்தியத் துணைக்கண்டத்தையே அடிமைப்படுத்த ஆங்கிலேயர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த புனித ஜார்ஜ் கோட்டையின் தாழ்வாரங்களில் இன்று நடந்து போனாலும், ஏதோ ஒரு மூலையில் பிரான்சிஸ் டேவும், ஆண்ட்ரூ கோகனும் பேசிக்கொண்டிருப்பதைப் போல தோன்றுகிறது. . .

Tuesday 19 July 2016

வருகிறார்கள் - கரன் கார்க்கி

# வருகிறார்கள் (நாவல்)

#கரன் கார்க்கி  

#ரூ.295/- 


இன்றைய தலைமுறையின் கதை. இளைஞர்கள் எவ்வாறு நகரத்தில் வாழ்கிறார்கள். அவர்களது அன்றாட வாழ்வியலை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. சென்னை போன்ற பெருநகர .டி இளைஞனின் வெளிநாட்டு கனவுகளையும் அவர்களது துயரங்களையும் விளக்கி பேசுகிறது. அவர்களின் பெற்றோர்களின் இயலாமையைப் பற்றி குடும்பச் சூழலைப்பற்றி விரிவாக இந்நாவல் பேசுகிறது.



கறுப்பர் நகரம் - கரன் கார்க்கி

#கறுப்பர் நகரம் (நாவல்)

#கரன் கார்க்கி

#ரூ.195/- 

சென்னை என்கிற நகரைப் பற்றிய நிஜமான Novelised History. நாவலை எழுதியிருக்கும் கரன் கார்க்கி சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர், நகரின் மாற்றங்களை நாவல் வழியாக மிக திறமையாக பதிவு செய்கிறார். சென்னைப் பட்டிணம், நாற்பது ஆண்டுகளில் சிங்கார சென்னையாக, மெட்ரோபாலிட்டன் நகராக தன்னை மாற்றிக் கொள்வதற்கு கொன்று தீர்த்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் பிரதிநிதிகளில் ஒருவன் செங்கேணி. இம்மண்ணில் பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்ந்தவர்கள், இன்று சென்னைக்கு தொடர்பற்ற இடத்தில் எங்கோ தூரத்தில் அகதிவாழ்க்கை வாழ அலைக்கழிக்கப்படுகிறார்கள். யார் யாரோ இந்நகரை சொந்தம் கொண்டாடுகிறார்கள். மண்ணின் மைந்தன் என்கிற அடிப்படையில் தன் முன்னோரின் வாழ்க்கை எப்படி இருந்து இருக்கும் என்று கரன்கார்க்கி செய்துப் பார்த்திருக்கும் ஆய்வுதான் கறுப்பர் நகரம்.
வெறும் ஆவணமாகி இருக்கவேண்டிய வரலாற்றை ரத்தமும், சதையுமாக மாற்றியிருக்கிறது கரன்கார்க்கியின் பேனா. புனைவும், நிஜமுமாகஎது புனைவு, எது நிஜமென்று அறியமுடியாவகையில் உருவாகியிருக்கும் மந்திரவாத யதார்த்தம்.
இன்று எல்லாருக்கும் சென்னையைத் தெரியும். மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அறியவிரும்புபவர்கள் கறுப்பர் நகரத்தை வாசிக்கலாம். ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை உணர நினைப்பவர்களும் வாசிக்கலாம். பொழுதுபோக்குக்கு ஒரு காதல் கதையையோ அல்லது குடும்பக்கதை, க்ரைம்கதை என்று ஏதோ ஒரு கதையை வாசிக்க விரும்புபவர்களும் இதை வாசிக்கலாம். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சேதியை கறுப்பர் நகரம் கட்டாயம் வைத்திருக்கிறது.
- யுவகிருஷ்ணா

ஊரடங்கு உத்தரவு - பி.என்.எஸ்.பாண்டியன்

ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)

#பி.என்.எஸ்.பாண்டியன் 

#ரூ.200/-

         
1979 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இருவரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கு எடுத்த முயற்சிகளையும் அதற்கு புதுச்சேரி மக்களிடம் தன்னிச்சையாக எழுந்த எதிர்ப்புகள் போராட்டங்கள் ஆகியவற்றை வரலாற்று தரவுகளுடன் பேசுகிறது இந்நூல்.

அந்தப் போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும். இந்த ஆகப்பெரும் போராட்டத்தை அரசியல்வாதிகள் படித்தால் அவர்கள் அரசியல் அறிவு விசாலமடையும். இளைஞர்கள் படித்தால் அவர்களிடம் நாட்டுப்பற்று மிகும். மாணவர்களிடம் இந்த வரலாறு மனிதத்தனம் மேலோங்கச் செய்யும். ஒரு அரசியல், பிரதேச வரலாறு என்ற முறையில், இந்தநூல் சுமார் பத்துநாள் வரலாற்றைச் சொல்லும் போக்கில், மாநில வரலாற்றையே சொல்லி விடுகிறது. ஒரு அபூர்வமான புத்தகம் இது.
-    எழுத்தாளர் பிரபஞ்சன்     

Monday 18 July 2016

உயிர்களிடத்து அன்பு வேணும் - யூமா வாசுகி

#உயிர்களிடத்து அன்பு வேணும் (சிறுவர் கதைகள் & வண்ணப்படங்களுடன்)

#யூமா வாசுகி (தொகுப்பும் மொழிபெயர்ப்பும்)

#ரூ.160/-

#சித்திரங்கள் - கி.சொக்கலிங்கம்


எல்லாமே சுவை மிக்க கதைகள். குழந்தைகளின் அனுபவ எல்லைக்குள்ளேயே புரிந்துகொள்ளத் தக்கதாகவும், அதேசமயம் அவர்களின் கற்பனைக்கும் தடையற்ற வெளியைக் கொண்டதாகவும் இக்கதைகள் அமைந்துள்ளன. இக்கதைகளை முன்வைத்து ஆசிரியர்கள் பல்வேறு செய்திகளைக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க முடியும். குழந்தைகளின் மனங்களில் நல்லுணர்வைத் தூண்ட முடியும்.

-    ச.தமிழ்ச்செல்வன்

கண்ணாடி - யூமா வாசுகி

#கண்ணாடி (சிறுவர் கதைகள் & வண்ணப்படங்களுடன்)

#யூமா வாசுகி (தொகுப்பும் மொழிபெயர்ப்பும்) 

#ரூ.170/-


இந்தப் புத்தகம் குழந்தைகளின் நேயத்திற்குரியது. என்றும் அவர்களின் மனதை விட்டு நீங்காத கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் அவர்களுக்கு புதியதொரு அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்கு வாசிப்பின் மகிழ்ச்சியாகவும் அறிவின் சேகரமாகவும் அமைகிறது. தளிர் உள்ளங்களில் நன்மையைத் துளிர்க்கச் செய்யும் இந்த நூல், உயர்வுக்கு இட்டுச் செல்லும் ஒரு பாதை.

-    ச.தமிழ்ச்செல்வன்

Tuesday 12 July 2016

ஆ.மாதவன் கதைகள்

#ஆ.மாதவன் கதைகள் (முழுத்தொகுப்பு)
#விலை ரூ.500/-

ஆ.மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெருட்டாமல் அவரது மொழி மணிப்பிரவாளம் இல்லை, மணிமிடைப் பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேரி போல. தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை. 
ஆ. மாதவனின் சிறுகதைகளை வாசித்தவர் இதை உணர்வார்கள், அவற்றின் தனித்துவம் பற்றியும் செய்நேர்த்தி பற்றியும் கலை வெற்றி பற்றியும் அறிவார்கள்.  
-  நாஞ்சில் நாடன்

Monday 4 July 2016

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு – சொற்சித்திரங்கள்

# மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு (சொற்சித்திரங்கள்)

சுந்தரபுத்தன்
# ரூ.150/-


எனக்கு ஊர்தான் முக்கியம் எனக்கூறும் சுந்தரபுத்தனுக்கு எழுதுவதுதான் 
வாழ்வின் நம்பிக்கை. திருவாரூர் மாவட்டம்  கண்கொடுத்தவனிதம் 
கிராமத்தில் பிறந்தவர். தந்தை நடராசன் என்கிற ஒளிச்செங்கோ, பெரியார்,
சி.பா.ஆதித்தனாரிடம் அறிமுகமும் அன்பும் கொண்டவர்.

இருபது ஆண்டுகால இதழியல் அனுபவம். மண்ணில் புதையுண்டு
போன புராதன நகரத்தை கண்டடையும் உற்சாகத்தை இவரது 
எழுத்துக்களில் அடையலாம். எழுதும் சிறுவரியில்கூட மொழியின் 
சுவாரசியத்தையும் மனிதர்கள் மற்றும் மண்ணின் மீதான நேசத்தையும்
பார்க்கலாம்.