# ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)
#பி.என்.எஸ்.பாண்டியன்
#ரூ.200/-
1979 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர்
எம்.ஜி.ஆர் மற்றும் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் இருவரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை
தமிழகத்துடன் இணைப்பதற்கு எடுத்த முயற்சிகளையும் அதற்கு புதுச்சேரி மக்களிடம் தன்னிச்சையாக
எழுந்த எதிர்ப்புகள் போராட்டங்கள் ஆகியவற்றை வரலாற்று தரவுகளுடன் பேசுகிறது இந்நூல்.
அந்தப் போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி
மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும்.
இந்த ஆகப்பெரும் போராட்டத்தை அரசியல்வாதிகள் படித்தால் அவர்கள் அரசியல் அறிவு விசாலமடையும்.
இளைஞர்கள் படித்தால் அவர்களிடம் நாட்டுப்பற்று மிகும். மாணவர்களிடம் இந்த வரலாறு மனிதத்தனம்
மேலோங்கச் செய்யும். ஒரு அரசியல், பிரதேச வரலாறு என்ற முறையில், இந்தநூல் சுமார் பத்துநாள்
வரலாற்றைச் சொல்லும் போக்கில், மாநில வரலாற்றையே சொல்லி விடுகிறது. ஒரு அபூர்வமான புத்தகம்
இது.
-
எழுத்தாளர் பிரபஞ்சன்
